நாட்டார்மங்கலத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அட்சதை வழங்கும் விழா
ADDED :739 days ago
செஞ்சி; நாட்டார்மங்கலத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பிதழ் மற்றும் அட்சதை வழங்கும் விழா நடந்தது.
வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கும் விழா மற்றும் ராமர் கோவிலுக்கு அட்சதை வழங்கும் விழா விழுப்புரம் மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், செல்வக்குமார், பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் பாண்டியன், மயிலம் தொகுதி பார்வையாளர் ராஜ்குமார், நிர்வாகிகள் திருமால், சரவணன், சுரேஷ், நேமி தாஸ், தமிழரசன், ஆளவந்தார், எழிலரசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் ராமர் கோவில் அழைப்பிதழுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். ராமர் படத்திற்கு அட்சதை துாவி வழியனுப்பினர்.