அவதரித்தார் அனுமன்
ADDED :742 days ago
குஞ்சரன் என்பவர் குழந்தை வேண்டி தவம் இருந்தார். பலனாக அங்கு தோன்றிய சிவபெருமான், நல்ல குணம் கொண்ட மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றுவான். அவன் வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான். உலகமே கொண்டாடும் விதத்தில் அவனது செயல் அமையும் என்று வரத்தை கொடுத்தார். அதன்படி குஞ்சரனுக்கு பிறந்த மகள்தான் அஞ்சனை. அவள் மணப்பருவம் அடைந்ததும் கேசரி என்னும் வானர மன்னரை மணந்தாள். நல்ல குணமும் பக்தியும் கொண்டவளான இவளுக்கு மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அவதரித்தார் அனுமன்.