உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தியன்று விரதம் இருந்தால் வேண்டிய வரத்தை பெறலாம்

அனுமன் ஜெயந்தியன்று விரதம் இருந்தால் வேண்டிய வரத்தை பெறலாம்

னுமன் ஜெயந்தியன்று விரதம் இருந்தால் வேண்டிய வரத்தை பெறலாம். அன்று பெருமாள், அனுமனை தரிசியுங்கள். ஸ்ரீராமஜெயம் என்னும் தாரகமந்திரத்தை 108, அல்லது 1008 முறை எழுதுங்கள். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படையுங்கள். பின் மாலையில் மீண்டும் கோயிலுக்கு சென்று பெருமாள், அனுமனுக்கு துளசி, வெற்றிலை மாலையை சாத்துங்கள்.
அனுமனும் ஸ்ரீராமனும்

தசரத மகாராஜா குழந்தை இல்லாமல் தவித்தார். அப்போது முனிவர்களின் வழிகாட்டுதல்படி புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். அதில் கிடைத்த பாயாசத்தை தன் மூன்று மனைவிகளுக்கு கொடுத்தார். ராம சகோதரர்களும் பிறந்தனர். வாயுபகவான் இதன் ஒரு பகுதியை அஞ்சனையிடம் கொடுத்தார்.
அவளும் அனுமனை பெற்றெடுத்தாள். இதனால் ஸ்ரீராமபிரானும் அனுமனும் சம வலிமை உள்ளவர்களாக உள்ளனர் என மராட்டிய மன்னர் சிவாஜியின் குரு ராமதாசர் கூறியுள்ளார்.
பல வடிவம் கொண்டவர் அனுமனுக்கு பல வடிவில் சிலைகள் உண்டு. அவர் இரண்டு கைகளையும் இணைத்து கூப்பி தலைமேல் வைத்து வணங்கும்
நிலையில் இருப்பவர் பக்த அனுமன். கூப்பிய கையை மார்புக்கு நேராக வைத்திருந்தால் அபயஹஸ்த அனுமன்.
ஒரு கையில் கதையும் மற்றொரு கையில் சஞ்சீவி மலையும் கொண்டிருந்தால் வீர அனுமன். ராமனை தன்தோள் மீது சுமந்தபடி ஐந்து முகங்கள் கொண்டிருந்தால் பஞ்சமுக ஆஞ்சநேயர். பத்து கைகளை கொண்டிருந்தால்
தசபுஜ ஆஞ்சநேயர். எல்லாம் இவரேபல பெருமைகளுக்கு சொந்தக்காரர் அனுமன்.

* ஆசைகளை துறந்தவர்.

* துாய மனம் படைத்தவர்.

* சிவ அம்சம் பெற்றவர்.

* சுக்ரீவன் ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராக இருந்து நாட்டைக் காத்தவர்.

* ஸ்ரீராமபிரான் தன் மனைவி சீதையை இழந்து தவித்தபோது, அவருடன் உடனிருந்து அன்பு செய்த உத்தமர்.

* கற்புக்கரசியாக திகழும் சீதை இலங்கையில்தான் உள்ளார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியவர்.

* வலிமையான வில்லை ஏந்திய ஸ்ரீராமபிரானின் துாதன் என்று விஸ்வரூபம் காட்டி சீதைக்கு தரிசனம் தந்தவர்.

* ராவணனின் மகனான இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் அனைவரும் மூர்ச்சித்து விழுந்தபோது சஞ்சீவிமலையைக் கொண்டு வந்து உயிரைக் காப்பாற்றியவர்.

* நந்திக்கிராமத்தில் ஸ்ரீராமபிரான் வெற்றியுடன் ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார் என பரதனிடம் அறிவித்த அறிவாளன்.

* ஆற்றல், அறிவு, செயல்திறன், வீரம், விவேகம், வாக்கு சாதுர்யம், முயற்சி, தன்னடக்கம், ராமபக்தி போன்ற நல்ல பண்புகளுக்கு சொந்தக்காரர்.

n சீதையின் திருவாக்கால் சிரஞ்சீவி பட்டம்பெற்று இன்றும் பக்தர்களின் குறைகளை தீர்க்கும் தயாளமூர்த்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !