உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காடுமலை கடந்து வந்தும் ஐயப்பனை காண முடிய வில்லை; திரும்பிய பக்தர்கள் வேதனை

காடுமலை கடந்து வந்தும் ஐயப்பனை காண முடிய வில்லை; திரும்பிய பக்தர்கள் வேதனை

சபரிமலை;  சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியது முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  இந்த நிலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்வம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அங்கு பக்தர்கள் 18 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கூட்ட நெரிசலால் தமிழக பக்தர்கள் பலர் சுவாமியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காடுமலை கடந்து வந்தும் ஐயப்பனை காண முடிய வில்லை என பக்தர்கள் வேதனையுடன் திரும்பி செல்கின்றனர். அவர்கள் பம்பையிலிருந்து கிளம்பி எரிமேலி மற்றும் பிற கோயில்களில் இருமுடியை கழற்றி விரதத்தை முடிக்கிறார்கள். கெடுபிடி காரணமாக ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாமல் திரும்புவதாக வேதனை அடைந்தள்ளனர்.தமிழக அரசு கடிதம்; சபரிமலையில் கூட்ட நெரிசலால் பக்தர்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரள தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.தேவசம் போர்டு ஆலோசனை; சபரிமலை, எரிமேலியில் நாளை பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும், 13ம் தேதி பந்தளத்தில் இருந்து தங்க ஆபரண ஊர்வலம் புறப்பாடும் நடக்க உள்ளது.மகரஜோதிக்கு, 5 நாட்கள் இருக்கும் நிலையில், இன்று தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !