கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவ விழா வெகு விமர்சை
ADDED :1000 days ago
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவ விழா வெகு விமர்சையாக நடந்தது.
கூடலழகிய பெருமாள், ஆண்டாள் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பெருமாள், ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மார்கழி 27ம் நாளான இன்று பக்தர்கள் திருவம்பாவை, திருப்பாவை பாடினர். கூடாரவல்லி விழாவில் சுவாமி கூடலழகிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. இந்நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் அமையும், பிரிந்த தம்பதியர் கூடுவர் என்பது ஐதீகம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். விழா முடிவில் அனைவருக்கும் உணவு, தாம்பூலம் வழங்கப்பட்டது.