குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
குருவாயூர்: கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 நாள் விரதம் இருப்பதாக கடந்த 12ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய தினம் மஹாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோயிலுக்கு சென்ற மோடி பிரார்த்தனை செய்தார். அதற்கு முன்னர் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியிலும் மோடி ஈடுபட்டார். நேற்று, ஆந்திர மாநிலம், லேபக்ஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். இன்று கேரள மாநிலம் சென்ற பிரதமர் மோடி, குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
புதுமணத் தம்பதிக்கு ஆசி; இன்று காலை குருவாயூர் கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, புதுமண தம்பதிகளுக்கு ஆசி வழங்கினார். நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோரையும் சந்தித்தார்.