உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படைகள் சூழ பரிவேட்டைக்கு சென்ற திருப்பதி மலையப்பசுவாமி

படைகள் சூழ பரிவேட்டைக்கு சென்ற திருப்பதி மலையப்பசுவாமி

திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பரிவேட்டை உற்சவம் நடந்தது. படைகள் சூழ பரிவேட்டைக்கு புறப்பட்டார் மலையப்ப சுவாமி.

வெங்கடேஸ்வர சுவாமி பரிவேட்டை உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக நேற்று மதியம் 1 மணிக்கு பரிவேட்டை மண்டபத்தில் சுவாமிக்கு ஆராதனை, நிவேதனம் நடந்தது. அதன் பிறகு, ஸ்ரீ கிருஷ்ணசுவாமி சந்நிதியில் பால், வெண்ணெய், ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. பின்னர் மலையப்பசுவாமி படைகள் சூழ பரிவேட்டைக்கு புறப்பட்டார் . அர்ச்சகர்கள் அம்புகளை எய்தனர். இவ்வாறு மூன்று முறை நடந்தது. விழா முடிந்ததும் மலையப்பசுவாமி சந்நிதி சென்றடைந்தார். இத்துடன் கோலாகலமாக நடைபெற்ற பரிவேட்டை உற்சவம் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !