/
கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோயிலில் பாரம்பரிய முறையில் அக்னி உருவாக்கப்பட்டு நவகுண்ட பூஜை
அயோத்தி ராமர் கோயிலில் பாரம்பரிய முறையில் அக்னி உருவாக்கப்பட்டு நவகுண்ட பூஜை
ADDED :657 days ago
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இன்று 19ம் தேதி கேசராதிவாஸ், கிருதாதிவாஸ் ஔஷததிவாஸ் போன்ற சடங்குகளும் நடைபெற்றன. ஸ்ரீராம பிரதிஷ்டையை முன்னிட்டு பாரம்பரிய முறையில் அக்னி உருவாக்கப்பட்டு நவகுண்டத்தில் நிறுவப்பட்டது. தொடர்ந்து வேதபாராயணம், ராமாயண பாராயணம் செய்யப்பட்டது. மாலையில் ஆராதனை மற்றும் தெய்வீக ஆரத்தி, தான்யாதிவாஸ் நடந்தது.