தனுஷ்கோடியில் பிரதமர் மோடி யாக பூஜை
ADDED :642 days ago
ராமேஸ்வரம், பிரதமர் மோடி இன்று தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நடக்கும் யாக பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கிறார். நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார். இரவு அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கினார். இன்று காலை 9:00 மணிக்கு மடத்தில் இருந்து காரில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை செல்கிறார். அங்கு நடக்கும் யாக பூஜையில் பங்கேற்று தரிசிக்கிறார். பின் அங்கிருந்து காரில் புறப்பட்டு கோதண்டராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். இங்கு தான் ராமபிரான், ராவணன் தம்பி விபீஷணருக்கு புனித நீரை ஊற்றி பட்டாபிஷேகம் சூட்டியதால் இங்கிருந்தும் பிரதமர் புனித நீரை அயோத்திக்கு எடுத்துச் செல்ல இருக்கிறார்.