உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோவிலில் குவிந்த பிரபலங்கள்; நெகிழ்ச்சி பதிவு

அயோத்தி ராமர் கோவிலில் குவிந்த பிரபலங்கள்; நெகிழ்ச்சி பதிவு

இன்று மதியம் 12.05 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க ஹிந்து மத தலைவர்கள், ஜீயர்கள், சன்னியாசிகள், பிரபலங்கள் குவிந்து வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது;

சாய்னா நேவால் கூறுகையில், "நம் அனைவருக்கும் இது ஒரு பெரிய நாள் என்று நான் நினைக்கிறேன். இன்று இங்கு இருக்கும் வாய்ப்பைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி. நாங்கள் இங்கு ராமரை தரிசனம் செய்வோம். எனவே, அந்த தருணத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம். என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்றார்

நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பார்தி மிட்டல் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்டார்.

நடிகர் விவேக் ஓபராய் மற்றும் பாடகர் சோனு நிகம் ஆகியோர் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவிலுக்கு பிராண பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளனர். விவேக் ஓபராய் கூறுகையில், "இது மாயாஜாலம். நான் பல படங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் கண்களுக்கு முன்பாக இதைப் பார்க்கும்போது, ​​ஏதோ மாயாஜாலத்தைப் பார்ப்பது போல் தெரிகிறது. என்றார்.

நடிகை கங்கனா ;திரைப்பட தயாரிப்பாளர் மதுர் பண்டார்கர் மற்றும் நடிகை கங்கனா ரணாவத் ஆகியோர் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்டனர்.


நடிகர் சிரஞ்சீவி அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி கோவிலில் பிராண பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள வந்தார். "இது கடவுள் கொடுத்த வாய்ப்பு, இங்கு இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்..." என்று அவர் கூறுனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !