வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம்
ADDED :655 days ago
வடலூர் ; கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் ஜோதி தரிசன விழா இங்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதற்காக இன்று வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனம் நாளை நடைபெறுகிறது. முதல் தரிசனம் காலை 6 மணிக்கும், தொடர்ந்து, காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.