திருப்பதியில் இ.பி.எஸ்; கண்ணை மூடி ஆழ்ந்த தியானம் செய்து வழிபாடு
ADDED :585 days ago
திருப்பதி; அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ். நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்; கண்ணை மூடி ஆழ்ந்த தியானம் செய்தது தொடர்பான ‘வீடியோ’ இணையத்தில் டிரெண்டாகி வருகிறதுதிருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் திருப்பதி சென்றுள்ளார். திருப்பதி மலையில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகையில், அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்; கண்ணை மூடி ஆழ்ந்த தியானம் செய்தது தொடர்பான ‘வீடியோ’ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.