இந்து அல்லாதவர் பழநி கோவிலில் நுழைய தடை; அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க நீதிபதி உத்தரவு
பழநி; பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குள் இந்து அல்லாதோர் நுழையத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குள் இந்து அல்லாதோர் நுழையத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இதில் இந்து அல்லாதோர், இந்துக் கடவுள் மீது நம்பிக்கை அல்லாதோரை பழநி முருகன் கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது. இந்து அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாற்று மதத்தை சார்ந்தவர்கள் வழிபட விரும்பினால் பழநி முருகன் கோயில் பதிவேட்டில் பதிய வேண்டும். கடவுளின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எழுத வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டுள்ளார்.