/
கோயில்கள் செய்திகள் / குறுக்குத்துறை முருகன் கோவிலில் 46 நாட்களுக்கு பிறகு மீண்டும் வழிபாடு தொடங்கியது
குறுக்குத்துறை முருகன் கோவிலில் 46 நாட்களுக்கு பிறகு மீண்டும் வழிபாடு தொடங்கியது
ADDED :642 days ago
திருநெல்வேலி; கனமழை, வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மீண்டும் வழிபாடு தொடங்கியது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலை முழுவதுமாக மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இதனால் வெள்ள நீர் கருவறை வரை சென்றதால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை. இந்நிலையில் 46 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் வழிபாடு தொடங்கியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.