சஷ்டி விரதம்; முருகனை நினை மனமே! நலங்கள் பெருகிடும் தினம் தினமே!
ADDED :582 days ago
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். சஷ்டியில் கந்தனை வேண்டி சரவணபவா என்றால் சகலமும் அருள்வான்!