சிவலோக நாதர் கோவில் விழா; மலர் துாவி பக்தர்கள் வழிபாடு
ADDED :710 days ago
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிவலோகநாயகி உடனமர் சிவலோக நாதர் கோவிலில், நேற்று மூன்றாம் ஆண்டு விழா நடந்தது.
கிணத்துக்கடவு, சிவலோக நாயகி உடனமர் சிவலோக நாதர் கோவிலில், மூன்றாம் ஆண்டு விழா நடந்தது. இதில், 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வேள்வி வழிபாடு நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும், திருக்கல்யாணமும் நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், திருக்கல்யாணத்தில் சுவாமிக்கு பக்தர்கள் அனைவரும் மலர் துாவி வழிபாடு செய்தனர்.