உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகாபுரி நகர் மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

அழகாபுரி நகர் மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

மானாமதுரை; மானாமதுரை அழகாபுரி நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை அம்மனுக்கு பால்,பன்னீர்,தயிர், இளநீர்,சந்தனம்,திரவியம்,நெய் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் ஹோமங்கள் வளர்த்து புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து பூஜை செய்த பின்னர் பூர்ணாகுதி முடிந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அன்னதானம் நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவில் மேட்டு தெரு, அழகாபுரி நகர்,ராம்நகர்,நேதாஜி நகர், மகாராஜா நகர்,அலங்கார் நகர்,மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சந்தனம், குருவம்மாள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !