உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் சனாதன தர்ம தார்மீக மாநாடு துவக்கம்; 57 பீடாதிபதிகள் பங்கேற்பு

திருப்பதியில் சனாதன தர்ம தார்மீக மாநாடு துவக்கம்; 57 பீடாதிபதிகள் பங்கேற்பு

திருப்பதி; திருமலை திருப்பதியில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் மாபெரும் இந்து சமய சனாதன தார்மீக மாநாடு இன்று துவங்கியது. இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி தொடக்க உரையாற்றினார்.அவர் கூறியதாவது; இது வேதங்கள் தோன்றிய புண்ணிய பூமி, விஷ்ணு மூர்த்தி ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இடம். இந்த நாட்டில் தர்மசரணைக்கு வழிகாட்டியாக ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருமலையில் அவதரித்துள்ளார் என்றார். சுவாமியின் ஆசியுடன் பல சமய, ஆன்மிக, சமூக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்து தர்மத்தைப் பரப்புவதன் ஒரு பகுதியாக, ஒரே எண்ணம் கொண்ட இந்து மத தலைவர்கள், சுவாமிகள் மற்றும் மடாதிபதிகளின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்படுகிறது. மடாதிபதிகளின் அறிவுரைகள், ஆலோசனைகளை பெற்று கோவிந்தம், மத்ஸ்ய கோவிந்தம், கிரிஜான கோவிந்தம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பக்தர்களிடம் இறைவனின் கீர்த்தனைகள் எடுத்துச் செல்லப்படுகிறது. சுவாமிக்கு சங்கீர்த்தன சேவை வழங்கிய ஸ்ரீ அன்னமாச்சார்யா, ஸ்ரீ புரந்தர்தாசர், ஸ்ரீ கனகதாசர், மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா ஆகியோரின் பெயர்களில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வேதங்களைப் பாதுகாப்பதற்காக வேதப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. சனாதன ஹிந்து தர்ம பிரச்சாரத்தை சித்த சுத்தியுடன் மக்களிடம் திருப்பதி தேவஸ்தானம் கொண்டு செல்லும். அதற்கு உங்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வேண்டும் என்று கூறினார்.  மூன்று நாள் மாநாடு திங்கள்கிழமை நிறைவடைகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பீடாதிபதிகள், மடாதிபதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !