அயோத்தி ராமர் கோயில் ராக சேவையில் பிரமிக்க வைத்த கைலாசோதரணம் நடனம்
ADDED :688 days ago
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில், கடந்த மாதம் 22ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலில் தரிசனம் செய்ய, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கோயிலில் தினமும் ராக சேவை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ராம ஜென்மபூமியில் நேற்று நடந்த ராக சேவை கொண்டாட்டத்தில் கேரளாவின் புகழ்பெற்ற கலைஞர் கலாமண்டலம் ஜிஷ்ணு பிரதாபின் கைலாசோதரணம் ( இராவணன் கைலாச மலையை தூக்குவது ) மற்றும் பார்வதிவிராகம் ( பார்வதி தேவி சிவபெருமானிடமிருந்து பிரிதல்) ஆகிய இரண்டு நிகழ்ச்சிகள் பக்தர்களை பிரமிக்க வைத்தது.