பழநியில் பக்தர்கள் கூட்டம்; காவடிகளுடன் குவிந்தனர்
ADDED :690 days ago
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.
பழநி முருகன் கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை உள்ளது தைப்பூசத் திருவிழா நிறைவடைந்த நிலையில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. தைப்பூச விழா நேற்று நடைபெற்ற நிறைவடைந்த நிலையில் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தைப்பூச பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து, அலகு குத்தி, கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கிரிவீதி பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. வெளிமாநில வியாபாரிகள் சிலர் பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பொருட்களை வாங்க வற்புறுத்துகின்றனர். இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.