உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்வம் சிவமயம்; காளஹஸ்தி ராகு கேது பூஜையில் ரஷ்ய பக்தர்கள் சிவ மந்திரம் கூறி மனமுருகி வழிபாடு

சர்வம் சிவமயம்; காளஹஸ்தி ராகு கேது பூஜையில் ரஷ்ய பக்தர்கள் சிவ மந்திரம் கூறி மனமுருகி வழிபாடு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடந்த ராகு கேது பூஜையில் ரஷ்ய பக்தர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான கோவிலில் பிப்ரவரி 05ம் தேதி ராகு கேட பூஜை நடந்தது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள காளஹஸ்தியில் காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும். ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். சிறப்பு மிக்க இக்கோயிலில் இன்று 30ம் மேற்பட்ட ரஷ்ய பக்தர்கள் வந்தனர். அவர்கள் கோயிலில் நடைபெற்ற ராகு கேது பூஜையில் கலந்து கொண்டு சிவ மந்திரம் கூறி மனமுருகி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !