/
கோயில்கள் செய்திகள் / மாதவனாக மாறிய மேத்யூ; உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் வாசித்து அசத்திய வெளிநாட்டு பக்தர்
மாதவனாக மாறிய மேத்யூ; உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் வாசித்து அசத்திய வெளிநாட்டு பக்தர்
ADDED :578 days ago
உடுப்பி: உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் சுவாமியின் பல்லக்கு ஊர்வலத்தின்போது, வெளிநாட்டு பிரஜை ஒருவர், புல்லாங்குழல் வாசித்து, பக்தர்களை ஆச்சரியப்படுத்தினார்.ஆன்மிக ஸ்தலமான உடுப்பியில், பல ஹிந்து மடங்கள் உள்ளன. இங்குள்ள கிருஷ்ணர் மடத்தில்தினமும் மாலையில் கிருஷ்ணர் சயனோற்சவத்தில் பல்லக்கில் பவனி வருவது வழக்கம். வழக்கம்போல், கடந்த 3ம் தேதி கிருஷ்ணர் பல்லக்கில் பவனி வந்தார். அப்போது, வெளிநாட்டு பிரஜை ஒருவர், புல்லாங்குழலில், கனகதாசர் கிருஷ்ணரை பார்த்து பாடிய பாடலை இசைத்தார். இவரின் இசையை கேட்ட பக்தர்கள், கண்களை மூடியபடி கேட்டு ரசித்தனர். வெளிநாட்டை சேர்ந்த இவரின் பெயர் மேத்யூ. இவர் தன் பெயரை மாதவா என மாற்றிக் கொண்டார். பெல்தங்கடியை சேர்ந்த ஹரிதாஸ் டோக்ராவிடம் புல்லாங்குழல் இசை கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.