காரமடை அரங்கநாதர் கோவிலில் கிருஷ்ணபட்ச ஏகாதசி சிறப்பு பூஜை
ADDED :634 days ago
கோவை: கிருஷ்ணபட்ச ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
கிருஷ்ணபட்ச ஏகாதசி திதியை யொட்டி காரமடை ரங்கநாதர் கோவிலில், சுவாமிக்கு அதிகாலை, ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. இதில் சகலவித திரவியங்களில் ரங்கநாதருக்கும், ஸ்ரீதேவி, பூதேவியருக்கும் அபிஷேகம் நடந்தது. ஏக காலத்தில் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, மங்களவாத்தியங்கள் முழங்க பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.