அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு; நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :630 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தனம், பால் என பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு, தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.