ராமேஸ்வரத்தில் இருந்து 60 பக்தர்கள் காசி பயணம்
ADDED :576 days ago
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 2ம் கட்டமக காசிக்கு 60 பேர் யாத்திரை பயணமாக ரயிலில் சென்றனர்.தமிழக அரசு சார்பில் ராமேஸ்வரம், காசி யாத்திரை பயணம் திட்டத்தை துவக்கியது. இதில் தமிழக முழுவதும் 300 பக்தர்களை ஹிந்து அறநிலைத்துறை தேர்வு செய்தது. இதில் ஜன.,31ல ராமேஸ்வரத்தில் இருத்து 60 பேர் காசிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினார். இதனைத்தொடர்ந்து 2ம் கட்டமாக நேற்று 60 பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்று இரவு 8:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் இருந்து பஸ் மூலம் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இவர்களை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் வழியனுப்பி வைத்தார். நேற்று இரவு 11:30 மணிக்கு புறப்பட்ட பனாரஸ் ரயிலில் பக்தர்கள் காசி சென்றனர்.