உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேற்காடு கருமாரியம்மன் கழுத்திலிருந்த தாலி திருட்டு

திருவேற்காடு கருமாரியம்மன் கழுத்திலிருந்த தாலி திருட்டு

திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த, 8 பவுன் மதிப்புள்ள தாலி சங்கலி மற்றும் திருமாங்கல்யம் திருடப்பட்டள்ளது.திருவேற்காடு கருமாரியம்மன், மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் இருக்கிறாள். இவளுக்கு பின்புறம் அம்பாள் சிலை ஒன்றுள்ளது. இந்த அம்பிகை அக்னி ஜுவாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி அமர்ந்திருக்கிறாள். தினமும் மாலை பிரதோஷ வேளையில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்த, 8 பவுன் மதிப்புள்ள தாலி சங்கலி மற்றும் திருமாங்கல்யம் மாயமானது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவில் பொறுப்பாளர் கனகசபரி அளித்த புகாரில் திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !