தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரைப் பெருவிழா; முகூர்த்த கால் நடப்பட்டது
                              ADDED :631 days ago 
                            
                          
                           தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரைப் பெருவிழாவுக்காக முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று (08ம் தேதி) நடந்தது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆண்டு தோறும் சித்திரைப் பெருவிழா 15 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.  நிகழாண்டு சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழா ஏப்ரல் 23ம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி, பெரிய கோவில் வளாகத்தில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பந்தல் கால் நடப்பட்டது. இதில், அரண்மனை தேவஸ்தான உதவி கமிஷனர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.