உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடம்பிடிக்கிறார் மதுரா கிருஷ்ணர்.. நாங்கள் கடவுளின் 3 அவதார இடங்களை தான் கேட்கிறோம்; யோகி ஆதித்யநாத்

அடம்பிடிக்கிறார் மதுரா கிருஷ்ணர்.. நாங்கள் கடவுளின் 3 அவதார இடங்களை தான் கேட்கிறோம்; யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை முடிந்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக ஓராண்டுக்கும் மேலும் விசாரணையில் இருக்கும் மனுவில் வாரணாசி நீதிமன்றம் அண்மையில் சில உத்தரவுகளை பிரபித்தது. அதன்படி, காசி விஸ்வநாதர் கோயிலின் ஒருபகுதியில் தான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதத்தை இந்து அமைப்பினர் முன்வைத்தனர். இதற்கு மசூதிக்குள் குறிப்பிட்ட அந்த ஒரு பகுதியில் இந்துக்கள் வழிபடலாம் என வாரணாசி நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மசூதிக்குள் இந்துக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இதைப்போலவே மதுரா மசூதி விவகாரமும் இன்னொருபக்கம் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து யோகி ஆதித்யநாத் பேசினார். அதில் அவர்கூறியதாவது; ``மகாபாரத போர் துவங்கும் முன், பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களையாவது தரும் படி துரியோதனனை கிருஷ்ணர் வற்புறுத்தினார். அதுபோல நாங்கள் கடவுளின் அவதார இடங்களான அயோத்தி, காசி, மதுரா ஆகிய எங்களின் மூன்று புனித தலங்களைக் கேட்கிறோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம். தற்போது இந்து சமுதாயம் தனது நம்பிக்கையின் அடிப்படையில், அயோத்தி, காசி, மதுரா எனும் மூன்று மையங்களைக் கேட்கிறது. அயோத்தியில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டையை பார்த்த காசியில் உள்ள நந்தி பகவான், தானும் அடம்பிடிக்கத் தொடங்கினார். அதனால், காசியில் (மசூதிக்கு முன்பாக) இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, (கியான்வாபி மசூதிக்குள்) வழிபாடு தொடங்கி உள்ளது. தற்போது மதுராவில் உள்ள கிருஷ்ணரும் அடம்பிடிக்கிறார்" என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !