பிரபுபாதரின் 150வது பிறந்தநாள் விழா; பிரதமர் மோடி பங்கேற்றார்
புதுடெல்லி ; பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் ஸ்ரீல பிரபுபாதரின் 150வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.புது தில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் ஸ்ரீல பிரபுபாதரின் 150வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.ஆன்மிக குருவின் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தையும் வெளியிட்டார். வைஷ்ணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்காற்றியவர் கௌடியா மிஷனின் நிறுவனர் பிரபுபாதா ஆவார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகள் மற்றும் வைஷ்ணவத்தின் வளமான ஆன்மீக பாரம்பரியத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் கௌடியா மிஷன் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இது ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் மையமாக உள்ளது. இன்று ஸ்ரீல பிரபுபாதரின் 150வது பிறந்தநாள் விழா விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்திய மக்கள் ஸ்ரீல பிரபுபாதரின் செய்திகளிலிருந்து எண்ணங்கள் மற்றும் சிறந்த வழிகாட்டுதலைப் பெறுகின்றனர். அவரது 150வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிபிட்டார்.