கல்லல் வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா
ADDED :576 days ago
காரைக்குடி; கல்லல் அருகே உள்ள எஸ்.ஆர் பட்டினத்தில் வீரமாகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முளைப்பாரி திருவிழா நடந்தது.கல்லல் அருகேயுள்ள எஸ்.ஆர் பட்டினத்தில் ஆண்டு தோறும், தை மாத அறுவடையை முடித்து, கடைசி செவ்வாயன்று முளைப்பாரி திருவிழா விமரிசையாக நடைபெறும். விவசாயம் செழித்திட நேற்று, எஸ்.ஆர் பட்டினத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. இதில், எஸ்.ஆர் பட்டினம், பெருங்குளம் அண்ணாநகர் உள்ளிட்ட கிராம மக்கள் கோயிலில் இருந்து முளைப்பாரி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அருகேயுள்ள குளத்தில் முளைப்பாரிகளை கரைத்தனர்.