ஆத்துக்காடு வடக்கு சூழ பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :632 days ago
நத்தம், நத்தம் சேத்தூர் ஊராட்சி கரந்தமலை வனப்பகுதியில் உள்ள வலசை ஆத்துக்காடு ஸ்ரீ வடக்கு சூழ பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி முன்னதாக திருமலைக்கேணி, அழகர் கோயில் மலை, வைகை, காவிரி உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி கோவில் முன் உள்ள யாகசாலைக்கு மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டது. நேற்று முன் தினம் கணபதி ஹோமத்துடன் மூன்று கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என். கண்ணன், சேத்தூர் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.