ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் 16 வகை அபிஷேகம்
ADDED :619 days ago
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. * நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.