உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி திருமலையில் மீண்டும் ஆர்ஜித சேவைகள் தொடக்கம்!

திருப்பதி திருமலையில் மீண்டும் ஆர்ஜித சேவைகள் தொடக்கம்!

நகரி: திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை ஒட்டி, ரத்து செய்யப்பட்டிருந்த ஆர்ஜித சேவைகள், மீண்டும் துவங்கின. திருப்பதி திருமலையில், நவராத்திரி பிரம்மோற்சவத்தை ஒட்டி, ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஒன்பது நாட்கள் நடந்த, நவராத்திரி விழா முடிவடைந்தது. இதையடுத்து, ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியது. நவராத்திரி பிரம்மோற்சவத்தை ஒட்டி, நேற்று முன்தினம், கோவிலில் ஐதீக முறைப்படி நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம், திருமலையில் பாபவிநாசம் அருகே உள்ள, பரிவேட்டை மண்டபத்தில் சிறப்பாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை ஒட்டி, திருமலை கோவிலில், கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில், 1.5 லட்சம் பேர், சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !