உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் தென் திருமலை ஸ்ரீ வாரி கோவிலில் தங்கத்தேர் வைபவம்

மேட்டுப்பாளையம் தென் திருமலை ஸ்ரீ வாரி கோவிலில் தங்கத்தேர் வைபவம்

கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் சுப்ரபாதம் விஸ்வரூப தரிசனம் தோமாலை ஆரத்தி 1008 நாமாவளி அர்ச்சனை நிவேதனம் பலி சாற்று முறை மதியம் தங்க கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து ஏகாந்த சேவை, தங்கத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி நான்கு மாத வீதிகளில் வலம் வந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மேற்கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !