திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ரத்னாங்கி சேவை
ADDED :720 days ago
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு கண்ணாடி அறையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ரத்னாங்கி சேவையில் வீரராகவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த தினமான தை அமாவாசை விழா நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் தரிசனம், அதிகாலை முதல் நடைபெற்றது. விழாவில் உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் கண்ணாடி அறையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.