காளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :619 days ago
காளஹஸ்தி; காளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, சுவாமி அம்மையார்களுக்கு சாஸ்திர முறைப்படி சிறப்பு அபிஷேகம் செய்து, வேத மந்திரங்கள் முழங்க ஆரத்தி செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பரத்வாஜ தீர்த்தத்திற்கு வந்து தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த சிறப்பு உற்சவத்தில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. சீனிவாசலு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அலுவலர்கள் வெங்கட சுப்பையா, சுதர்சன், ஹரி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.