ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :955 days ago
ராமேஸ்வரம்; விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று விடுமுறை தினம் யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனம் மூலம் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடினார்கள். பின் கோயில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை வரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.