சதுர்த்தி பூஜை; புஷ்ப அலங்காரத்தில் பிரசன்ன மகா கணபதி அருள்பாலிப்பு
ADDED :953 days ago
கோவை ; கோவை ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் தமிழ் மாதம் மாசி பிறப்பு மற்றும் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. புஷ்ப அலங்காரத்தில் விநாயகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.