வித்யா கணபதி கோவிலில் சீரடி சாய்பாபா பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு
ADDED :953 days ago
கோவை; கோவை புதூர் பிரிவில் இருக்கும் கஸ்தூரி வித்யா கணபதி கோவிலில் சீரடி சாய்பாபாவின் நான்காம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் மற்றும் கும்ப கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சீரடி பாபா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கணபதி, சீரடி சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.