வேலூர் தங்க கோவிலில் உலக நன்மை வேண்டி 10008 விளக்குகள் ஏற்றி வழிபாடு
ADDED :2 minutes ago
வேலூர்: ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்க கோவிலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் 10 ஆயிரத்தி 8 விளக்குகள் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.
வேலூர், ஸ்ரீபுரம் தங்க கோவிலில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு,10008 நெய் விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை நடந்தது. உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை வளத்திற்காகவும், நடந்த இந்த பூஜையை, சக்தி அம்மா துவக்கி வைத்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ சக்கரம் வடிவத்தில் விளக்குகள் ஜொலித்தது.