பழமையான சோமநாதர் கோவில் தல விருட்சம் சாய்ந்தது: பக்தர்கள் வேதனை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே நீடூரில், கிபி ஏழாம் நூற்றாண்டில், சுந்தரர் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட பழமையான சோமநாதர் ஆலயத்தில், 200 ஆண்டுகள் பழமையான தல விருட்சமான மகிழமரம், வேரோடு சாய்ந்தது, பக்தர்கள் வேதனை, மரபணு முறைப்படி மரத்தை மீண்டும் வளர்க்க பக்தர்கள் கோரிக்கை :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூரில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமநாதர் ஆலயம் அமைந்துள்ளது. கிபி ஏழாம் நூற்றாண்டில் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகங்கள் பாடல் பெற்ற பழமையான இந்த ஆலயம், இந்திரனால் கட்டப்பட்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஆலயத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகிழமரம் தலவிருட்சமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும், மரத்தின் உள்ளே பூச்சிகள் அரித்த காரணமாகவும், திடீரென்று நேற்று மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பழமையான மரத்தினை மரபணு மூலம் மீண்டும் புதுப்பித்து அதே இடத்தில் நட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.