சாம்பல் புதன்; தவக்காலம் துவக்கமாக நெற்றியில் சிலுவையிட்டு வழிபட்ட கிறிஸ்தவர்கள்
புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் கோவிலில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் நெற்றியில் சிலுவையிட்டு வழிபட்டனர்.
கிறிஸ்தவ சர்ச்களில் சாம்பல் புதனையொட்டி தவக்காலம் துவக்கமாக சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் முதல் 40 நாட்கள் நோன்பு மேற்கொள்வர். இதன் 7 வெள்ளிக்கிழமைகளில் 14 திருப்பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடுகளையும் நடத்துவர். சாம்பல் புதனை முன்னிட்டு நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை துவங்கினர் கிறிஸ்தவர்கள். இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து அசைவ உணவுகளை தவிர்த்து ஏழை எளியோருக்கு உணவு வழங்குவர். திருமணம் மற்றும் ஆடம்பர நிகழ்ச்சிகள் நடைபெறாது. 40 நாட்களிலும் சிலுவை பாதத்தை நினைவு கூரும் ஆராதனை ஆலயங்களில் நடைபெறும்.