நம்பிக்கையே அஸ்திவாரம்
ADDED :609 days ago
தன் நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்தான் அப்துல் மாலிக். நல்லவனாக நடித்து குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றான் அவன். நாளடைவில் நண்பன் வீ்ட்டிலேயே திருட ஆரம்பித்தான். இவரைப் போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நட்பு என்பது உயர்வான விஷயம். நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீதே நட்பு என்ற கட்டடம் கட்டப்படுகிறது. அதில் நயவஞ்சகம் சிறிதும் கூடாது. உங்களைச் சுற்றியும் நயவஞ்சகர் இருக்கலாம். விழிப்புடன் இருங்கள்.