தேர்ந்தெடுக்கும் உரிமை
ADDED :609 days ago
ஒருமுறை நபிகள் நாயகம், ‘‘உங்கள் ஒவ்வொருவருக்கும் சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டு விட்டது’’ என்றார்.
உடனே சிலர், ‘‘அதன்படியே செயல்படலாமா’’ எனக் கேட்டனர்.
அதற்கு அவர், ‘‘இறைவனுக்கு பயந்து நற்செயல்களை யார் செய்கிறாரோ, அவருக்கு சொர்க்கத்துக்கு செல்லும் பாதை காட்டப்படும். எவன் கஞ்சத்தனம் செய்து தீயசெயல்களை செய்கிறானோ, அவனுக்கு நரகத்திற்கு செல்லும் பாதை காட்டப்படும்’’ என்றார்.
சொர்க்கமா... நரகமா... நீங்களே தேர்வு செய்யுங்கள்.