காரைக்கால் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்
காரைக்கால்; காரைக்கால் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் மாசிமகப் பிரம்மோற்சவத்விழாவை முன்னிட்டு தியாகராஜர் புறப்பாடு உன்மத்த நடனம் உற்சவம் நடைபெற்றது.
காரைக்கால் திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவில் மாசிமகப் பிரம்மோற்சவத் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி அனுக்ஞை விக்வேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கரணம், அங்குரார்ப்பணம், ஆச்சாரிய ரக்ஷாபந்தனம் பஞ்சமூர்த்தி அபிஷேகம் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி மாசிமகத்தையொட்டி ரிஷபக்கொடி வீதியுலா நடைபெற்றது. அன்று சூரிய பிறையில் சுவாமி வீதியுலா, சந்திபிறையின் சுவாமி வீதியுலா நடைபெற்றது.நேற்று தியாகராஜர் புறப்பாடு (உன்மத்த நடனம்) வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இன்று பஞ்சமூர்த்தி பிரகாரம் வலம் வருதல்,சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சி வரும் 23ம் தேதி திருத்தேர் திருவிழா, மாலை ஜடாயு இராவண யுத்தம் நடைபெறுகிறது.வரும் 24ம் தேதி புஷ்பப் பல்லாக்கு, வரும் 25ம் தேதி தெப்போற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகிறது.