மாசி பிரம்மோற்சவம்; ரதத்தில் உலா வந்த காஞ்சிபுரம் காமாட்சியம்மன்
ADDED :706 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவமான இன்று காலை ரத உற்சவம் நடந்தது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை அம்மன் உலா வந்து அருள்பாலிக்கிறார். விழாவின் ஏழாம் நாளான இன்று காலை ரதம் உற்சவம் நடந்தது. ரதத்தில் எழுந்தருளி காஞ்சி காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் 23ம் தேதி வெள்ளிதேர் உற்சவம் நடைபெறுகிறது. 26ம் தேதி அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.