மேலும் செய்திகள்
குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
562 days ago
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா
562 days ago
காரைக்கால்; காரைக்காலில் வீழி வரதராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு பெருமாள் வெண்ணைத்தாழி சேவையில் வீதியுலா நடந்தது.காரைக்கால் திருமலைராஜன்பட்டினத்தில் வீழி வரதராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகப்பெருவிழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதில் கடந்த 22ம் தேதி சூரிய பிறை, சந்திரபிறை வீதியுலா நடந்தது. இன்று விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வீழி வரதராஜப்பெருமாள் வெண்ணைத்தாழி சேவை வீதியுலா மற்றும் இரவு கருடவாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. நாளை வீழி வரதராஜப் பெருமாள் பவளக்கால் சப்பரத்தில் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளை எதிர்கொண்டு அழைத்து பட்டினச்சேரியில் சமுத்திரதீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு வீழி வரதராஜப்பெருமாளுக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் உபயதாரர் பாலகுரு.இன்பெக்டர் கிறிஸ்டி பால். சப்.இன்பெக்டர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.
562 days ago
562 days ago