மாசி மகத்தன்று குளிப்பதற்கு நிபந்தனை இருக்கு!
ADDED :561 days ago
மாசி மகத்தன்று குளத்தில் அனைவரும் நீராட வேண்டிய அவசியமில்லை. குடும்பத்திலுள்ள ஒருவர் நீராடினாலும் போதும். முந்தைய தலைமுறையினர் செய்த பாவமும், இப்போது இருப்பவர்கள் செய்த பாவமும் நீங்கி விடும். இனி வரப்போகும் தலைமுறை பாவம் செய்யாத உயர்நிலை உண்டாகும். தன் குடும்பம், தாய்வழி, தந்தைவழி குடும்பத்தினர், சம்பந்தி, மாமா, அத்தை, சகோதர, சகோதரி குடும்பத்தினர், மாமியார், மாமனார் குடும்பத்தினர் என அனைவரது பாவங்களும் பறந்தோடும். ஆனால் ஒரு நிபந்தனை. குளித்தபின் அவரது மனதில் பாவசிந்தனை ஏற்படக் கூடாது.