உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிள்ளியூர் கோயில் கும்பாபிஷேகம்

கிள்ளியூர் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம் கொடைவாசல் வட்டம் கிள்ளியூரில் ராமசுவாமிகோயில் உள்ளது. கிளிகள் கொஞ்சிவிளையாடும் சோலையாக இருந்த இடம் என்பதால் கிளியூர் எனப்பட்டது. அப்பெயரே கிள்ளியூர் என்று மருவிவிட்டது. தவமிருந்த புலிக்கால் முனிவருக்கு காட்சியளித்த
விஷ்ணு, கிள்ளியூர் சென்று லட்சுமி நாராயணனை வழிபட்டு நற்பேறு அடையும்படி அருள்புரிந்தார். 600 ஆண்டுகள் பழமையான கோயில் பழுதடைந்த நிலையில் திருப்பணிகள் முடிந்து அக்.28 ஞாயிறன்று காலை 9- 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இங்கு லட்சுமி
நாராயணப் பெருமாள், வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவி விக்ரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டவை. அக்.29 முதல் டிச.12 வரை மண்டலாபிஷேகம் நடக்கிறது. போன்: 98414 87135, 94443 85088


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !