உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் பூவோடு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் பூவோடு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி துவங்கியது.பொள்ளாச்சியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் கோவிலில், திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் பூவோடு ஊர்வலம், தெப்பக்குளம் வீதி வழியாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !